நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் 4G அலைவரிசை சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய சேவைகள்.. இதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், காணி உரிமப் பத்திரப் பரிவர்த்தனைகள் மற்றும் வாகன வருமான உரிமங்களைப் பெறுதல் உள்ளிட்ட முக்கிய அரச சேவைகள் அனைத்தும் இணையவழியில் (Online) மாற்றப்படவுள்ளன.